அன்பு , நட்பு , மனிதநேய சிந்தனைகளைக் கருவாகக்கொண்டு சாதி சமய , அரசியல் பேதங்களை அகற்றி இதயங்களை வளப்படுத்தும் இனியதோர் நட்புலகு.
IPL Logo
  • IPL Logo
  • IPL Logo
News Details
கிருஷ்ணகிரி மண்டல பேரவைக்கிளை நண்பர்கள் சந்திப்பு - ஜனவரி 2024
  • கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் புனித ஜான் போஸ்கோ பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் காலை 9.00 மணி அளவில் பேரவைத் தலைவர் மா.கருண் அவர்களின் தலைமையில் நிகழ்ச்சி  தொடங்கியது.


பள்ளி முதல்வர் திருமதி.ஜெயந்தி மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் திருமதி.ந. மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கடவுள் வாழ்த்து மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் பள்ளி நிர்வாகம் சார்பாக  பள்ளி ஆசிரியை திருமதி.நிர்மலா மேரி அவர்கள் அனைவரையும் சிறப்பாக வரவேற்றார். இணைச் செயலாளர் திரு. எ.நந்தகுமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கியதுடன் நிகழ்வை சிறப்பாக நெறியாள்கை செய்தார். 1213 பள்ளி மாணவிகள் கலந்து கொண்ட பிரம்மாண்டமான நிகழ்வு.

மண்டல பேரவைக்கிளை அமைப்பாளர் வே.நாகப்பன் அவர்கள் மண்டல கிளையின் சிறப்பான செயல்பாடுகளை எடுத்துரைத்து தொடக்கவுரை ஆற்றினார். பள்ளி முதல்வர் திருமதி.ஜெயந்தி அவர்கள் தலைவர்* *அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து வரவேற்புரை வழங்கினார். பள்ளி முதல்வர் சகோதரி திருமதி.ஜெயந்தி அவர்களுக்கு, பேரவைத் தலைவர் அவர்கள் பொன்னாடை அணிவித்து  நமது மகிழ்வை தெரிவித்துக் கொண்டார். 

12ஆம் வகுப்பு பயிலும்  ஏழை மாணவி ச. அஜித்தா அவர்களுக்கு கல்வி கட்டணம்,  ₹ 20,000 /_, மற்றும் மாணவி ச.நந்தினி அவர்களுக்கு கல்விக் கட்டணம் ₹ 20,000/_ பேரவை சார்பாக பேரவைத் தலைவர் அளித்தார். பள்ளி மாணவிகள் அனைவரும் அந்நிகழ்வு கண்டு மிகவும் நெகிழ்ச்சியுடன், மகிழ்ச்சியைக் கரவொலி மூலம் தெரிவித்தது அனைவருக்கும் மகிழ்வாக அமைந்தது.

தலைமை செயற்குழு உறுப்பினர் திருமதி.ந. மீனாட்சி அவர்கள் கோகோ விளையாட்டு பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.* *பள்ளி நிர்வாகம்  சார்பாக அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துககளைத் தெரிவித்தனர்.  பேரவை மகளிர் அணி சார்பாக பள்ளி முதல்வர் திருமதி. ஜெயந்தி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

புதிய உறுப்பினர் திருமதி. ஜி.பி. சசிகலா அவர்களை பேரவை நண்பர் திரு.ஜி பிரபாகர் அறிமுகப்படுத்தினார். பேரவைத் தலைவர் திருமதி.G. P. சசிகலா  அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். திரு. கெ.சுகுமாரன் - திருமதி.இந்திரா சுகுமாரன் தம்பதியருக்கு, பேரவைத் தலைவர் அவர்கள் திருமணநாள் பரிசு அளித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

பேரவை நண்பர் திரு.சாமி @ ச.சிவகுமார் அவர்களின் புதல்வன் சி.ஹேமந்த், பேரவைத் தலைவர் அவர்கள் முன்பாக தனது 100வது திருக்குறள் ஒப்புவிப்பை சிறப்பாக நிகழ்த்தினார். பேரவைத் தலைவர் பேரவை இளவல் சி.ஹேமந்த் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

பேரவை நண்பர்கள் தங்களது பேரவை அனுபவங்களைப் பகிர்ந்து மகிழ்ந்தனர்.  துணை ஒருங்கிணைப்பாளர் திரு.கு. இரத்தினம், பேரவை உறவுகள்* *திரு.க.ஆறுமுகசாமி, திரு.ஜி.பிரபாகர், திரு.மனுநீதிச்சோழன், திரு.கெ.சுகுமாரன், திரு.சி, இராஜன், திரு.சாமி @ ச.சிவகுமார், திரு.அ.மாரிமுத்து, திரு.ரா.சுப்பிரமணியன், திரு.ச. தீர்த்தகிரி மற்றும் பேரவை மகளிர் திருமதி. ஜெயந்தி நந்தகுமார், திருமதி. இந்திரா சுகுமாரன், திருமதி. தமிழ்ச்செல்வி நாகப்பன், திருமதி. சசிகலா பிரபாகர், திருமதி. நதியா இராஜன், திருமதி.ஹேமலதா மாரிமுத்து மற்றும்  பேரவை இளவல்கள் சி.ஹேமந்த்,  சி.ரிஷிதா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள நண்பர்கள் தின விழாவை, பேரவைத் தலைவர் தலைமையில் சிறப்புடன் கொண்டாட தீர்மானிக்கப்பட்டது.

பேரவைத் தலைவர் அவர்கள் சிறப்பான பேருரையாற்றி, பள்ளி மாணவிகளுக்கு அறிவுரையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

நிகழ்ச்சியின் நிறைவாக பள்ளி ஆசிரியை அனைவருக்கும் நன்றி தெரிவிக்க தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி இனிதாக நிறைவடைந்தது.

பேரவைத் தலைவரின் "இல்லம் தேடி நட்பு"......  நிகழ்வாக, திரு.S.வாசுதேவன் - V.கீதாராணி அவர்களின் இல்லம் சென்று, இனிப்புகள் வழங்கி, பொன்னாடை அணிவித்து திருமணநாள் வாழ்த்துகளை தெரிவித்தார். மண்டல அமைப்பாளர் வே. நாகப்பன் அவர்களின் இல்லத்திற்கு சென்று நீண்ட நேரம் உரையாடி மகிழ்ந்தார்.