அன்பு , நட்பு , மனிதநேய சிந்தனைகளைக் கருவாகக்கொண்டு சாதி சமய , அரசியல் பேதங்களை அகற்றி இதயங்களை வளப்படுத்தும் இனியதோர் நட்புலகு.
IPL Logo
  • IPL Logo
  • IPL Logo
History
 
பேரவை வழித்தடங்கள்:



 

 

குஜராத் பூகம்ப நிவாரண மையம் அமைத்து (27-01-2001 முதல் 2-2-2001 வரை) நிவாரண நிதி திரட்டி மும்பைஆட்சித் தலைவரிடம் வழங்கியது.

 

ஆழிப்பேரவை பாதிப்பின் போது குமரி மாவட்டம் குளச்சல் முதல் மணக்குடி வரை கடற்கரை வழியாகப்பயணித்து (12-01-2005)பாதிக்கப்பட்டோருக்கு அரிசி, பருப்பு, உணவு தானியங்கள் மற்றும் துணிமணிகளைநேரடியாக வழங்கியதுடன் தொட்டில்பாடு கிராமத்தில் மட்டும் 200 பேருக்கு நல உதவிகள் வழங்கியது.

 

தேனி கவிஞர் வெற்றிவேல் எழுதிய "அதிகாலை", மும்பை கவிஞர் செந்தூர் நாகராஜன் எழுதிய"இதயத்துடிப்பு", மும்பை கவிஞர் இரஜகை நிலவன் எழுதிய "கரையேறும் அலைகள்", மும்பை கவிஞர் எம். எஸ். இராஜன் மார்டின் எழுதிய "உணர்வுகள்", ஓசூர் கவிஞர் கருமலைத் தமிழாழன் எழுதிய "செப்பேடு" ஆகியகவிதை நூல்களுக்கு வெளியீட்டு விழா நடத்தி தமிழ்க்கவிஞர்களை ஊக்குவித்தது.

 

மும்பை கவிஞர் செந்தூர் நாகராஜன் அவர்களால் 1050 பக்கங்கள் கொண்ட மிகப்பிரமாண்டமான "காமராஜர்காவியம்" கவிதை நூல் படைக்கபடவும், சிறப்பான வெளியீட்டு விழா காணவும், நூலுக்கு ஆய்வரங்கள் நடத்திதமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்தவும் முழுமையாக துணை நின்றது.

 

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மாநகரில் "பிரான்ஸ் தமிழ்ச் சங்கம்" நடத்திய மகாகவி பாரதியார்125வது ஆண்டுவிழாவில் (04-11-2007)சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு பங்கேற்ற ஒரே ஒரு மும்பைத் தமிழ் அமைப்பு.

 

பாரிஸ் மாநகரில் வோரியல் தமிழ்க் கலாச்சார மன்றம் நடத்திய "மகாத்மா காந்தி சிலை திறப்பு விழா" வுக்கு(11-11-2011)சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு பங்கேற்ற ஒரே ஒரு மும்பைத் தமிழ் அமைப்பு என்பதுடன்வோரியல் மாநகராட்சி மேயர் பேரவைத் தலைவருக்கு நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்தியது வரலாற்றுச் செய்தி.

 

தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கமத்தின் 6வது மாநாடு இலங்கையில் நடைபெற்ற போது சிறப்பு விருந்தினராகஅழைக்கப்பட்டு பங்கேற்றது.

 

சர்வதேச அளவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஏராளமான தமிழ் அமைப்புகளுடன் நட்பு பேணி உலகளாவியவகையில் தமிழர்களை ஒருங்கிணைத்தும், தமிழ் கலாச்சார பண்பாட்டு நிகழ்வுகளில் பங்கேற்றும், தாய் மொழிவளர்க்கும் இனிய முயற்சியில் முழுமையாக ஈடுபட்டுள்ள மும்பைத் தமிழ் அமைப்பு.