அன்பு , நட்பு , மனிதநேய சிந்தனைகளைக் கருவாகக்கொண்டு சாதி சமய , அரசியல் பேதங்களை அகற்றி இதயங்களை வளப்படுத்தும் இனியதோர் நட்புலகு.
IPL Logo
  • IPL Logo
  • IPL Logo
News Details
பேரவைத் தலைவர் இளைய மகள் சரண்யா- ரோகித் திருமணவிழா - பிப்ரவரி 2023
  • செகந்தராபாத்

இந்தியப் பேனாநண்பர் பேரவை. மும்பை. 9892035187.

பேரவைக் குடும்ப உறவுகள் அனைவருக்கும் இதய வணக்கம்.

16.02.2023, வியாழக்கிழமை செகந்தராபாத் நகரில் நடைபெற்ற எனது இளைய மகள் சரண்யா- ரோகித் திருமணவிழாவில் மகிழ்வுடன் பங்கேற்று,பேரவைக் குடும்ப உறவு போற்றிய நட்பு உறவுகள் அனைவருக்கும் இதய அன்பை பூரண மன நெகிழ்வுடன் பதிவு செய்கிறேன்.


திருச்சி, கிருஷ்ணகிரி, சென்னை, குமரி, தென்காசி, கர்நாடகா, மும்பை நண்பர்கள் அதிக அளவில் கலந்து சிறப்பித்தனர்.


மணவிழா மகிழ்வின் சிறப்பு நிகழ்வாக பொதுச் செயலாளர் ஜெ. ஜான் கென்னடி, பொருளாளர் கோ. செல்லத்தம்பி, அறங்காவலர்கள் முத்து செல்வராஜா, ஆ. பிரமநாயகம், திருமதி பா. மலர்விழி துணைத்தலைவர் முனைவர் சி.சிவ. பிரேம்பிரகாஷ், தேசிய ஒருங்கிணைப்பாளர் புலவர் தியாகசாந்தன், கிருஷ்ணகிரி மண்டல ஒருங்கிணைப்பாளர் வி. நாகப்பன்* *செயற்குழு உறுப்பினர்கள் எஸ். சிவகுமார், சு. பாஸ்கர்,  ஆ.வி. கிப்சன், திருச்சி மண்டல அமைப்பாளர்          பா. மனோகரன், கிருஷ்ணகிரி மாவட்ட அமைப்பாளர் மா. மோகன், சென்னை மாவட்ட அமைப்பாளர் ரெ. சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் பேரவை வளர்ச்சி - சிந்தனைக் களம் நடைபெற்றது.


பேரவை நிகழ்வுகளான .......
26.02.2023 - சதுரங்கக் திருவிழா- தென்காசி
05.03.2023 - 26ஆவது நட்புச் சங்கமம் குறித்து புதுடில்லி மாநிலக்கிளை நண்பர்களுடன் ஆலோசனை.
12.03.2023 - நண்பர்கள் தினம் {பேரவையின் 29ஆவது ஆண்டு தொடக்க விழா}
18.03.2023 - கிருஷ்ணகிரி மண்டலக்கிளை சார்பாக நண்பர்கள் தினம் பெருவிழா
19.03.2023 - திண்டுக்கல் மாவட்டப் பேரவைக் கிளை துவக்கவிழா.
20-21 மே 2023 - 26ஆவது நட்புச் சங்கமம், புதுடில்லி.
பற்றி நண்பர்கள் கருத்துரையாடல்  சிறப்பாக அமைந்தது.


புதுடில்லியைச் சேர்ந்த ஆர். கௌசல்யா அவர்கள் அளித்த வாழ்வாதார உதவி வேண்டிய விண்ணப்பம், மாநில அமைப்பாளர் ஆ. பிரமநாயகம் அவர்களின் பரிந்துரையுடன் ஏற்க்கப்பட்டு ₹ 33000/_ பேரவை சார்பாக வழங்கப்பட்டது.

  
அதனை ஈடு செய்யும் வகையில், 21.05.2022, பொதுக்குழு தீர்மானத்தின்படி, ஆ. பிரமநாயகம் அவர்கள் அறங்காவலர் பங்களிப்பாக  ₹ 33000/_பேரவைக்கு வழங்கினார்.


கோவை மாணவர் த. மனிஷ் குமார் அவர்களுக்கு கல்வி உதவித் தொகை ₹ 12980 /_ பேரவை சார்பாக வழங்கப்பட்டது.

நிகழ்வில் பங்கேற்ற பேரவை உறவுகள் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து பேரவை அன்பு பகிர்ந்து மகிழ்ந்தோம்.


என்றும் இணைந்திருப்போம் இதய உணர்வுடன்,
மா. கருண், தலைவர்,
இந்தியப் பேனாநண்பர் பேரவை, மும்பை.