அன்பு , நட்பு , மனிதநேய சிந்தனைகளைக் கருவாகக்கொண்டு சாதி சமய , அரசியல் பேதங்களை அகற்றி இதயங்களை வளப்படுத்தும் இனியதோர் நட்புலகு.
IPL Logo
  • IPL Logo
  • IPL Logo
News Details
கன்னியாகுமரி மண்டலப் பேரவைக் கிளை நண்பர்கள் சந்திப்பு - ஜனவரி 2023
  • கன்னியாகுமரி

இந்தியப் பேனாநண்பர் பேரவை, மும்பை. 9892035187

கன்னியாகுமரி மண்டலப் பேரவைக் கிளை நண்பர்கள் சந்திப்பு. 15. 01. 2023  ஞாயிறு மாலை 3 மணி இடம் : கோல்டன் மஹால்,வெள்ளமோடி, குமரி மாவட்டம்.

பேரவை நிறுவனர்-தலைவர் மனிதநேய மாமணி திரு.மா. கருண் அவர்கள் தலைமையில் குமரி மண்டலப் பேரவைக் கிளை நண்பர்கள் சந்திப்பு சிறப்புடன்  நடைபெற்றது. 

சிறப்பு விருந்தினர்களாக புதுடெல்லி மாநிலப்  பேரவைக் கிளை அமைப்பாளரும், பேரவை அறங்காவலருமான திரு.ஆ.பிரமநாயகம், சிங்கப்பூர் கிளை அமைப்பாளர்  திரு. ஆர். வினோத் ஆகியோர் பங்கேற்றுப் சிறப்பித்தனர். குமரி மண்டலக்கிளை அமைப்பாளர் ,பேரவை அறங்காவலர் திரு. தா. தேவதாஸ்  அனைவரையும் வரவேற்று சிறப்பு செய்தார்.

நிகழ்வின் துவக்கமாக, தலைவர் மற்றும் சிறப்பு விருந்தினர்களா மரக்கன்றுகள் நட்டனர்.

திரு.ஆ. பிரமநாயகம் அவர்கள் தன் துணைவியாருடன் இணைந்து, புதுடில்லியில் நடைபெறவிருக்கும் 26ஆவது  நட்புச்  சங்கம விழாவில் {20-21 மே 223} கலந்து கொள்ள அன்பு அழைப்பு விடுத்தார். தலைவர் அவர்கள் 2023ஆம் ஆண்டுக்கான பேரவையின் நாட்காட்டியை வெளியிட்டு,  அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து தமிழர் திருநாள் - 2023 வாழ்த்து தெரிவித்தார்.

பேரவை மகளிர் அணி சார்பாகவும் அனைவருக்கும் பொன்னாடை வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. பேரவைத் தலைவர் திரு. மா. கருண் அவர்கள் பேரவை சார்பாக நடைபெற்ற கட்டுரை / பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்ட  மாணவ மாணவிகளுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் பேரவை செயல்பாடுகள் மற்றும் சிறப்புகளை தெளிவாக எடுத்துக் கூறி பேருரையாற்றினார். பேரவைத் தலைவரின் எழுச்சியுரை மாணவர்கள் இதயத்தில் மனிதநேயச் சிந்தனையை விதைத்தது  என்பதில் ஐயமில்லை.

குமரி மண்டலப் பேரவைப் புரவலர்  மருத்துவர் மா.நெடுஞ்செழியன் அவர்கள் சிறப்புரை வழங்கி வாழ்த்தினார்.
பேரவை சார்பாக இரு ஏழை மாணவிகளுக்கு தலா ₹ 10000/_ வீதம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
பேரவை நடத்திய தமிழர் திருநாள்- 2023 சிறப்பு பேச்சுப் போட்டியில் கலந்து  வெற்றிபெற்ற மாணவி சுப்ரியாவிற்கு ரொக்கப்பரிசு காசோலையாக வழங்கப் பட்டது.

கட்டுரைப் போட்டியில் பங்கேற்ற குமரி மண்டல மாணவ, மாணவியர் அனைவருக்கும் மண்டலக் கிளை சார்பாக நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. புதிய உறுப்பினராக பேரவையில் இணைந்த திருமதி. ஆ. பத்மா அவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

நிகழ்வை திருமதி.சியா ரெஜின் அவர்கள் மிகவும் சிறப்பாக நெறியாள்கை செய்தார்.
திருமதி. தா.ஜெனிலா மற்றும் திருமதி. ஜெயா இருவரும்  ஒருங்கிணைப்பாளர்களாக இருந்து நிகழ்வை சிறப்பாக  நடத்தினார்கள். பேரவை நண்பர் திரு. சி. முருகேசன் அவர்கள் நன்றியுரை ஆற்ற தேனீர் /  சிற்றுண்டியுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.

பேரவை நண்பர்கள் எஸ். இராஜசேகர்,   வி. மரியந்தோணிராஜ்,திரு. பி. நாராயண தாஸ்,.திரு. பி. விக்டர், திரு. பி. ஜேசுராஜ், திரு. பி. இராசு,திரு. அ. ரெஜின் பரத், திரு.தே.  தீபு, திரு. பி. நாராயணதாஸ், திரு.ஆர்.  தனசிங் திருமதி. தே. பரமேஸ்வரி, திருமதி. டி. ராஜம்மாள், திருமதி. பி. தங்கநாடாச்சி, திரு. தா. நடராஜன், திரு. பி. ஜான்சன் மற்றும் ஏராளமானோர் நிகழ்வில் கலந்து கொண்டு பெருமை சேர்த்தார்கள்.