அன்பு , நட்பு , மனிதநேய சிந்தனைகளைக் கருவாகக்கொண்டு சாதி சமய , அரசியல் பேதங்களை அகற்றி இதயங்களை வளப்படுத்தும் இனியதோர் நட்புலகு.
IPL Logo
  • IPL Logo
  • IPL Logo
Humanitarian Services Details
கிருஷ்ணகிரி மாவட்ட இந்தியப் பேனாநண்பர் பேரவை பொதுப்பணி
  • கிருஷ்ணகிரி

இன்று(11.05.20) காலை 11.15 மணிக்கு அன்புத்தலைவர் அவர்களின் ஆலோசனை அறிவுரைப்படி வியாபாரமின்றி சிரம நிலையில் இருக்கும் நமது பேரவை நண்பர் ஓசூர் திரு. ஆறுமுகசாமி அவர்களுக்கு ₹ 500 ரொக்கம், அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது.

2 மாதமாய் வருமானமின்றி இருக்கும் நாற்சக்கர ஓட்டுனர் சுரேஷ் அவர்களுக்கு ₹1000 ரொக்கமும் மளிகைப் பொருட்களும் வழங்கப்பட்டது.

 
என்னோடு பேரவை நண்பர்கள் E. நந்தகுமார், A.ராஜா, புஷ்பராஜ் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
வழக்கம்போல நமது கிருஷ்ணகிரி மாவட்ட இந்தியப் பேனாநண்பர் பேரவை தன்னை பொதுப்பணியில் பெருமையுடன் ஈடுபடுத்திக் கொண்டது.
 
நிகழ்வுகள் அத்தனையும் தனித்து நின்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்து பண உதவியும் செய்த நண்பர் E.நந்தகுமார் அவர்களுக்கு இதய நன்றி.
 
பங்கேற்று உதவிய நண்பர்களுக்கு பேரவை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.  
சி.சிவ.பிரேம்பிரகாஷ்,
துணைத்தலைவர், இந்தியப் பேனாநண்பர் பேரவை.